நவ.1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு

இன்று முதல் செப்.8-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
நவ.1, 2ம் தேதிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு
Published on

சென்னை,

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆசிரியர் தேர்வு வாரியம் இந்தாண்டு (2025) தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு (தாள்-I மற்றும் தாள் - II) நடத்துவதற்கு உத்தேசித்து அறிவிக்கையை A (Website: http://www.trb.tn.gov.in) 11.08.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. கல்வித்தகுதி மற்றும் விண்ணப்பம் சார்ந்த அனைத்து விவரங்களும் அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் இணைய தளம் வாயிலாக (Online Application) விண்ணப்பிக்க 11.08.2025 முதல் 08.09.2025 பிற்பகல் 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அறிவிக்கை தொடர்பான கோரிக்கை மனுக்கள் trbgrievances@tn.gov.in என்ற மின்னஞ்சல் வாயிலாக பெறப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com