மாற்றுத்திறனாளிகள் தேர்வர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் தேர்வர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகள் தேர்வர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு முடிவு வெளியீடு
Published on

சென்னை,

ஆசிரியர் தகுதித் தேர்வில் மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு தகுதி மதிப்பெண் குறைத்து அறிவிப்பை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டு இருந்தது. இந்த நடைமுறை கடந்த ஆண்டு (2025) ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்புக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்புக்கு தேர்வு நடத்தப்பட்டு தேர்வு முடிவு கடந்த மாதம் 30- ந் தேதி வெளியிடப்பட்ட நிலையில், தற்போது விண்ணப்பத்தில் மாற்றுத்திறனாளிகள் என்ற விவரத்தை பதிவிட்டவர்களுக்கு தேர்வு முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு உள்ளது.

தகுதி பெற்ற தேர்வர்கள் தங்களுடைய தகுதி சான்றிதழை www.trb.tn.gov.in என்ற இணையதளத்தில் நாளை (சனிக்கிழமை) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com