ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு

குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.
ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியீடு
Published on: 

சென்னை

ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஆண்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது.

இதனை தொடர்ந்து தமிழக அரசு பள்ளிகளில் பணிபுரிய கூடிய ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த திட்டமிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. தொடக்கப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஜூலை 4-ந்தேதி, உயர்நிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஜூலை 5-ந்தேதி தேர்வு நடைபெற்றது.

833 மையங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் 833 மையங்களில் சிறப்பு தகுதித்தேர்வு நடந்தது. முதல் தாள் தேர்வு 221 மையங்களிலும் 2-ம் தாள் தேர்வு 612 மையங்களிலும் நடைபெற்றது.

முடிவுகள் வெளியீடு

முதல் தாள் தேர்வை 59,535 பேரும், 2-வது தாள் தேர்வை ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பேரும் எழுதியிருந்தனர். இந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன.

குறைக்கப்பட்ட தகுதி மதிப்பெண்கள் அடிப்படையில் வெளியான முடிவின்படி, பட்டதாரி ஆசிரியர் தேர்வு எழுதிய ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 929 பேரில் 61,153 பேரும், இடைநிலை ஆசிரியர் தேர்வு எழுதிய 59,535 பேரில் 47,628 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com