பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை: கணவர் தலைமறைவு

ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
பள்ளியில் ஆசிரியை வெட்டிக் கொலை: கணவர் தலைமறைவு
Published on

சேலம்,

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கமலாபுரம் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியை ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முதற்கட்ட தகவலின்படி குடும்பத் தகராறு காரணமாக அவரது கணவர் இச்சமபவத்தை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஓமலூர் டிஎஸ்பி சஞ்சீவ்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.

சம்பவத்திற்குப் பிறகு ஆசிரியையின் கணவர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவரை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com