ஆசிரியர் தற்கொலை: கொஞ்சம் கூட கவலை இல்லாமல், கவிதை பாட சொல்லி "வைப்" செய்து கொண்டிருக்கிறாரே முதல்-அமைச்சர்; எடப்பாடி பழனிசாமி


ஆசிரியர் தற்கொலை: கொஞ்சம் கூட கவலை இல்லாமல்,  கவிதை பாட சொல்லி வைப் செய்து கொண்டிருக்கிறாரே முதல்-அமைச்சர்; எடப்பாடி பழனிசாமி
x

போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சென்னை,

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நேற்றைய போராட்டத்திற்குப் பிறகு வானகரம் மண்டபத்தில் அடைக்கப்பட்டதாகவும் அப்போது அவர் வார்னிஷ் குடித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிர்ழந்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இந்த சூழலில், ஒருவர் தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி‌ நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "வைப்" செய்து கொண்டிருக்கிறாரே மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் என்ற உயர்வான பதவிக்கே இந்த பெயிலர் மாடல் முதல்-அமைச்சருக்கு ஒரு இழுக்கு. உயிரிழந்த கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என அதில் பதிவிட்டுள்ளார்.

1 More update

Next Story