"ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

"ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை" - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
Published on

சென்னை,

பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கல்வித்துறையில் பல்வேறு பதிவேடுகள் கணிணி மயமாக்கப்படும் என்றும் தேவையில்லாத பதிவேடுகள் நீக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதன்படி 81 பதிவேடுகளை மட்டும் இணையதளத்தில் பராமரித்தால் போதும் என்று தெரிவிக்கபட்டுள்ளது.

அந்த வகையில் ஆசிரியர்கள் இனி பாடத்திட்டம், பணிப்பதிவேடுகளை பராமரிக்கத் தேவையில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு ஆசிரியர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனிடையே ஆசிரியை ஒருவர் பணிச்சுமையால் அழுது புலம்பிய வீடியோ வெளியானதை தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com