ஆசிரியையின் ஸ்கூட்டர் திருட்டு

திருவையாறு அருகே ஆசிரியையின் ஸ்கூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஆசிரியையின் ஸ்கூட்டர் திருட்டு
Published on

திருவையாறு;

திருவையாறு அருகே உள்ள கீழபுனவாசல் தமிழர் தெருவை சேர்ந்தவர் சுமதி(வயது34). இவர் திருவையாறில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று காலை சுமதி தனது ஸ்கூட்டரை பள்ளி அருகே நிறுத்திவிட்டு மாலை பள்ளி முடிந்து வந்து பார்த்த போது ஸ்கூட்டரை மர்ம நபர்கள்திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து திருவையாறு போலீஸ் நிலையத்தில் சுமதி புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருகில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் பட்டுக்கோட்டை தாலுகா தம்பிக்கோட்டை, மேலக்காடு பகுதியை சேர்ந்த கணேசன் மகன் ரவி (44) ஸ்கூட்டரை திருடி சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் ரவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com