

சென்னை,
தமிழகத்தில் கடந்த 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு இருக்கின்றன. அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பள்ளிகளுக்கு சுழற்சி முறையில் மாணவ-மாணவிகள் வரவழைக்கப்பட்டு வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதன்படி, நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருந்தாலும், சில மாவட்டங்களில் ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அனைத்து மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகளில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், பள்ளிகளில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் உடல் வெப்பநிலை அதிகமாக இருக்கும் ஆசிரியர்கள், மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க கூடாது என பள்ளிகல்வி ஆணையர் தெரிவித்துள்ளார். மேலும் பள்ளிக்கு சம்பந்தமில்லாத நபர்களை பள்ளிக்கு அனுமதிக்ககூடாது என பள்ளிக்கல்வி ஆணையர் அறிவுறித்தி உள்ளார்.