அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை மைத்ரேயன் எம்.பி., கருத்தால் சர்ச்சை

அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை என்கிறரீதியில் அ.தி.மு.க மாநிலங்களவை எம்.பி., மைத்ரேயன் கருத்து தெரிவித்துள்ளார்.
அணிகள் இணைந்து மூன்று மாதங்கள் கடந்தபிறகும் மனங்கள் இணையவில்லை மைத்ரேயன் எம்.பி., கருத்தால் சர்ச்சை
Published on

சென்னை

ஜெயலலிதா மறைவுக்குப் பின், அ.தி.மு.க தலைமைக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தினார். இதனால், அ.தி.மு.க 2 அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக நீதிவிசாரணை, சசிகலா குடும்பத்தை ஒதுக்குவது என பன்னீர்செல்வத்தின் இரண்டு கோரிக்கைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணியினர் நிறைவேற்ற, ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பின்னர் கடந்த ஆகஸ்ட்டில் இரு அணிகளும் இணைந்தன. முதலமைச்சராக எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வமும் இருந்துவருகின்றனர். அ.தி.மு.க இரு அணிகளும் இணைந்து இன்றுடன் 3 மாதங்களாகிறது.

இந்த நிலையில், மாநிலங்களவை எம்.பி-யும், பன்னீர்செல்வம் ஆதரவாளருமான மைத்ரேயன், அ.தி.மு.க அணிகள் இடையே சலசலப்பு இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில், 'ஓ.பி.எஸ்- ஈ.பி.எஸ் அணிகள் இணைந்து இன்றோடு மூன்று மாதங்கள் நிறைவுற்றுள்ளன. 'மாதங்கள் உருண்டோடுகின்றன. மனங்கள்?' என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன் மழை பாதிப்புகளைப் பார்வையிட வரும்போது, அதுகுறித்து அமைச்சர்கள் தகவல் தெரிவிப்பதில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்து இருந்தது குறிப்பிடதக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com