தொழில்நுட்ப கோளாறு: சென்னை- தூத்துக்குடி விமானம் ரத்து


தொழில்நுட்ப கோளாறு: சென்னை- தூத்துக்குடி விமானம் ரத்து
x

கோப்புப்படம்

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தில் இருந்த 72 பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.

சென்னை,

சென்னை விமான நிலையத்தில் இருந்து தூத்துக்குடிக்கு செல்ல இண்டிகோ விமானம் ஒன்று தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 72 பயணிகள் இருந்தனர்.

இந்த நிலையில் விமானம் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்படும் நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானத்தில் இருந்த 72 பயணிகளும் விமானத்தில் இருந்து இறக்கிவிடப்பட்டனர். இதனையடுத்து தொழில்நுட்ப கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியியலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

1 More update

Next Story