தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவது பாதிப்பு

'சென்னை ஒன்' செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவது பாதிப்பு
Published on

சென்னை,

மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள், காகிதத்திலான பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்றும் யுபிஐ, டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

Also Read
எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள் - கமல்ஹாசன் பரபரப்பு பேட்டி
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவது பாதிப்பு

சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயன்படுத்தப்படும் மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் (ETM) எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதால், தற்போது மின்னணு பயணச்சீட்டுகளை வழங்குவதில் தற்காலிகத் தடை ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்படும் வரை நடத்துனர்கள் மூலமாக காகிதத்திலான கைமுறை (Manual) பயணச்சீட்டுகள் மட்டுமே வழங்குவார்கள் என்பதைப் பயணிகள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Also Read
மகா சிவராத்திரி: திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் விடிய, விடிய சாமி தரிசனம்
தொழில்நுட்பக் கோளாறு: சென்னை மாநகரப் பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு வழங்குவது பாதிப்பு

இக்காலக்கட்டத்தில் UPI, NCMC கார்டுகள், டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் மூலமான பணப்பரிமாற்றங்களை ஏற்க இயலாது என்பதையும், 'சென்னை ஒன்' (Chennai One App) செயலி தற்காலிகமாகச் செயல்படாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள இந்தச் சிரமத்திற்கு வருந்துவதுடன், தொழில்நுட்பக் குழுவினர் இப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பயணிகளின் மேலான ஒத்துழைப்பை நாடுகிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com