செல்போன் பார்த்ததை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை

தேவர்குளம் அருகே செல்போன் பார்த்ததை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
செல்போன் பார்த்ததை கண்டித்ததால் இளம்பெண் தற்கொலை
Published on

பனவடலிசத்திரம்:

தேவர்குளம் அருகே உள்ள சுண்டன்குறிச்சி ஊரைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (வயது 45). விவசாயி. இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு சினேகா (19) என்ற மகளும், ஒரு மகனும் உண்டு. சினேகா பிளஸ்-2 படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தார். அவர் வீட்டு வேலைகள் செய்யாமல் தொடர்ந்து செல்போனை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதை அமல்ராஜ் கண்டித்தார்.

இதனால் வேதனை அடைந்த சினேகா நேற்று முன்தினம் தோட்டத்துக்கு சென்று பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சினேகா நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தேவர்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com