விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

வருசநாடு அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்
Published on

வருசநாடு அருகே தங்கம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி கவிதா (வயது 30). இவர் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் வயிற்று வலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த கவிதா வீட்டில் யாரும் இல்லாதபோது விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கடமலைக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com