மேல்மலையனூர் அருகேவிஷம் குடித்து இளம்பெண் தற்கொலை

மேல்மலையனூர் அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
மேல்மலையனூர் அருகேவிஷம் குடித்து இளம்பெண் தற்கொலை
Published on

மேல்மலையனூர், 

மேல்மலையனூர் அருகே உள்ள மகாதேவிமங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை மகள் சந்தியா (வயது 23). செஞ்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனை பரிசோதனைக்கூடத்தில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று சந்தியா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் மயங்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி சந்தியா நேற்று முன்தினம் இரவு இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து சந்தியா தற்காலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com