கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் கட்டாய கருக்கலைப்பு; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு

கடலூர் அருகே கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண்ணை கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்த 5 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடுதல் வரதட்சணை கேட்டு இளம்பெண் கட்டாய கருக்கலைப்பு; கணவர் உள்பட 5 பேர் மீது வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுபாக்கத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் ஆர்த்தி (வயது 27). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் எருமைப்பட்டியை சேர்ந்த சீனுவாசன் மகன் பிரேம்குமார் என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த மறுநாளே பிரேம்குமார் குடும்பத்தினர், ஆர்த்தியிடம் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட நகைகளின் எடையை கேட்டு தகராறில் ஈடுபட்டனர்.

மேலும் ஆர்த்தியின் மாமியார் சுகந்தி, எங்கள் ஊர் பகுதியில் வரதட்சணையாக 40 முதல் 50 பவுன் வரை போடுவார்கள் என்று கூறி, அவருடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார். பின்னர் கணவன்-மனைவி இருவரும் பெங்களூரு சென்று வசித்து வந்தனர். இதற்கிடையே ஆர்த்தி கர்ப்பிணியானார்.

இதுபற்றி அறிந்த பிரேம்குமார் அவரது தாய் சுகந்தி, தந்தை சீனுவாசன், உறவினர்கள் அனுஷா, விஜய்பாபு ஆகியோர் ஆர்த்தியிடம் பெற்றோர் வீட்டில் இருந்து கூடுதல் வரதட்சணை வாங்கி வரும்படி கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். மேலும் அவரை தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று கட்டாய கருக்கலைப்பு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com