செல்போனில் பேசியதை தாத்தா கண்டித்ததால் கிணற்றில் குதித்து 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை

தாத்தா கண்டித்ததால் மனவேதனையில் இருந்த மாணவி அருகில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on: 

தர்மபுரி,

செல்போனில் பேசியதை தாத்தா கண்டித்ததால் கிணற்றில் குதித்து 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

11-ம் வகுப்பு மாணவி

தர்மபுரி மாவட்டம் கடத்தூர் அருகே உள்ள கணபதிபாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது பேத்தி ஜீவிதா (17 வயது) கடத்தூரில் உள்ள அரசு பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். பெற்றோரை இழந்த மாணவி ஜீவிதா தாத்தாவுடன் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று மாணவி செல்போனில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தாத்தா கிருஷ்ணன் இதை கண்டித்துள்ளார். இதனால் மனவேதனையில் இருந்த மாணவி ஜீவிதா அருகில் உள்ள கிணற்றில் குதித்து விட்டார்.

தற்கொலை

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணன் கூச்சலிட்டார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கிணற்றில் இருந்து மாணவியை மீட்டு மேலே கொண்டு வந்தபோது ஜீவிதா இறந்தது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணன் கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் கடத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுதேவன் வழக்குப்பதிவு செய்து மாணவி உடலை கைப்பற்றி தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீசார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com