கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Published on

அரக்கோணம் - திருவள்ளூர் ரோடு, மோசூர் ரோடு, புளியமங்களம் ஆகிய பகுதிகளில் அரக்கோணம் டவுன் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அரசு ஐ.டி.ஐ. அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில் அவர் அரக்கோணம் கிரிபில்ஸ்பேட்டை பகுதியை சேர்ந்த கவுதம் (வயது 20) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து, ஒரு கிலோ 300 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com