கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

நீடாமங்கலத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Published on

நீடாமங்கலம்:

நீடாமங்கலம் போலீசார் சம்பவத்தன்று தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது நீடாமங்கலம் பெரியார் தெருபகுதியில் உள்ள பொதுக்கழிப்பிடம் அருகில் சந்தேகத்துக்குரிய வகையில் நின்ற ஒருவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் நீடாமங்கலம் பெரியார் தெருவை சேர்ந்த மதுர என்கிற சக்திவேல்(வயது26) என்றும் அவர் விற்பனைக்காக 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com