கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Published on

அரக்கோணம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன் ராஜா தலைமையிலான போலீசார் நேற்று திருத்தணி ரோடு ஜெயா நகர், செந்தில் நகர், மங்கம்மாபேட்டை ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மங்கம்மா பேட்டை பூங்கா அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த நபரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர் வடமாம்பாக்கம் பகுதியை சேர்ந்த அமர்நாத் (வயது 22) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை சோதனை செய்த போது கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com