கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது
Published on

பொள்ளாச்சி

பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டி பாஸ்கர் நகர் பகுதியில் நகர கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் நின்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனையிட்டனர். அப்போது அவரிடம் 75 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் ஊஞ்சவேலாம்பட்டி செல்வகணபதி நகரை சேர்ந்த தொழிலாளி காளிதாஸ்(வயது 28) என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com