கஞ்சா விற்ற வாலிபர் கைது

வேலூரில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

வேலூர் வடக்கு போலீசாருக்கு சைதாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சைதாப்பேட்டை தண்ணீர் தொட்டி அருகே நின்று கொண்டு இருந்த வாலிபரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கர் மகன் கணபதி (வயது 23) என்பதும், கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து கணபதியை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com