கஞ்சா விற்ற வாலிபர் கைது

இரணியல் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

திங்கள்சந்தை:

இரணியல் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

இரணியல் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே சிறப்பு பிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும் படி மொபட்டுடன் நின்ற கொண்டிருந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தலக்குளம் குலாலர் தெருவை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 23) என்பதும், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 50 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com