

சோளிங்கரை அடுத்த கீழாண்டைமோட்டூர் கிராமத்தை சேர்ந்த விநாயகம் என்பவரின் மகன் வெங்கடேசன் (வயது 26) என்பவர் கஞ்சா விற்றதாக சோளிங்கர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண்ஸ்ருதி, கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன்பேரில் வெங்கடேசனை கும்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டார்.