

தூசி
வெம்பாக்கம் தாலுகா தூசி கிராமத்தில் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு மற்றும் போலீசார் இன்று பல்லாவரம் சாலையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி அருகே ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு சந்தேகம்படும்படி சுற்றிக் கொண்டிருந்த ஒரு வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அவர் தூசி கிராமத்தைச் சேர்ந்த திருமலை (வயது 27) என்பதும், கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.
இதுகுறித்து தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருமலையை கைது செய்தனர்.
மேலும் அவரிடம் இருந்த 110 கிராம் கஞ்சா பொட்டலங்களை பேலீசார் பறிமுதல் செய்தனர்.