கஞ்சா விற்ற வாலிபர் கைது

தேனி-கம்பம் சாலையில் தப்புக்குண்டு விலக்கு பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

தேனி போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்யா தலைமையிலான போலீசார், தேனி-கம்பம் சாலையில் ரோந்து சென்றனர். அப்போது தப்புக்குண்டு விலக்கு அருகில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருந்த வாலிபரை பிடித்து, அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அதற்குள் 1 கிலோ 800 கிராம் கஞ்சா இருந்தது. விசாரணையில் அவர் காமயகவுண்டன்பட்டியை சேர்ந்த ஜெயசங்கிலி மகன் சரவணன் (வயது 26) என்பதும், அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்தனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com