கஞ்சா விற்ற வாலிபர் கைது

கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
Published on

குமணன்தொழு பகுதியில், மயிலாடும்பாறை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குமணன்தொழு அய்யாவு தெரு அருகே, கஞ்சா விற்றுக்கொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த குபேந்திரன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் குமணன்தொழுவை சேர்ந்த குமார் (36) மூலம், திருப்பூரை சேர்ந்த கதிரேசன் (34) என்பவரிடம் இருந்து கஞ்சாவை விற்பனைக்காக வாங்கியிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக உள்ள அவர்கள் 2 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com