கஞ்சா கடத்திய வாலிபர் கைது

கஞ்சா கடத்திய வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கஞ்சா கடத்திய வாலிபர் கைது
Published on

பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் அம்மையார் குப்பம் கிராமத்தில் உள்ள ஆந்திர பஸ் நிறுத்தம் அருகே ஆர்.கே.பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது ஆந்திராவில் இருந்து வந்த ஒரு பஸ்சில் இருந்து இறங்கி நடந்து வந்த வாலிபரை சந்தேகத்தில் பிடித்து சோதனை செய்தனர். சோதனையில் அவரிடம் 1 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஜனகராஜ குப்பம் கிராமத்தைச் சேர்ந்த வேணுகோபால் (வயது 24) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com