விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

கீழ்பென்னாத்தூர் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள மேக்களூர்- ராஜாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன், விவசாயி.

இவரது மகன் சதீஷ்குமார் (வயது 23). என்ஜினீயரிங் பட்டதாரியான இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் தகவல் தெரிவிக்காமல் நண்பர்களுடன் 3 நாள் வெளியூர் சுற்றுலா சென்று விட்டு ராஜாபாளையம் வீட்டிற்கு வந்துள்ளார்.

அப்போது ரவிச்சந்திரன், அவரது மனைவி வாசுகி ஆகியோர் சதீஷ்குமாரிடம் ஏன் சொல்லாமல் ஊர் சுற்றி விட்டு வந்திருக்கிறாய் என கேட்டதாக கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த சதீஷ்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்துவிட்டு மயங்கி கிடந்தார்.

பின்னர் வீட்டுக்கு வந்த பற்றோர் சதீஷ்குமாரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து கீழ்பென்னாத்தூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com