விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

தானிப்பாடி அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே போந்தை வேடியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 45), இவர் பானிபூரி கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார்.

இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், தங்கப்பாண்டியன் (24), துரைப்பாண்டியன் (21) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். தங்கபாண்டியன் பி.எஸ்சி படித்துவிட்டு தனியார் கூரியர் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.

இவர் நேற்று  விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனடியாக அவரை சிகிச்சைக்காக தானிப்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தானிப்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கப்பாண்டியன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com