வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

செய்யாறு அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுகா ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விநாயகம். இவரின் மகன் பாலாஜி (வயது 20), தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவர் கடந்த சில மாதங்களாக உடல் நலப் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்கவில்லை.

அவருக்கு மீண்டும் உடல் நலப் பாதிப்பு ஏற்படவே மனமுடைந்த பாலாஜி பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து விட்டு, வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை குடும்பத்தினர் மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மோரணம் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com