விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

திருமருகல் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

திட்டச்சேரி:

திருவாரூர் மாவட்டம் எண்கண் பூங்காவூர் பகுதியை சேர்ந்தவர் கண்ணையன் மகன்பாஸ்கரன் (வயது 33).கூலி தொழிலாளி. இவர் திருமருகல் ஊராட்சி ஆண்டிதோப்பில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். இந்த நிலையில் தனது குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 19-ந்தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாஸ்கரன் விஷத்தை குடித்து விட்டு மயங்கி கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாஸ்கரன் பரிதாபமாக நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com