வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

நாங்குநேரியில் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

நாங்குநேரி:

நாங்குநேரி பாரதி தெருவைச் சேர்ந்தவர் தங்கையா மகன் நாகராஜ் (வயது 26). 10-ம் வகுப்பு வரை படித்திருந்த இவருக்கு சரியான வேலை கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த அவர் சம்பவத்தன்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அவரை பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி நாகராஜ் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com