விஷம் குடித்து வாலிபர் தற்கொலை

பாபநாசம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
Published on

பாபநாசம்:

பாபநாசம் அருகே விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஷம் குடித்தார்

பாபநாசம் அருகே வளத்தாமங்கலம் கிராமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜாங்கம். இவருடைய மகன் சூர்யா (வயது 25). இவர் தொடர்ந்து வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று பலன் அளிக்காததால் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சூர்யா வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) எடுத்து குடித்து விட்டு மயங்கி விழுந்தார். உடனடியாக அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பாபநாசம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

சிகிச்சை பலனின்றி சாவு

பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பாபநாசம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com