வாலிபர் விஷம் குடித்து தற்கொலை

தக்கோலம் அருகே வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் விஷம் குடித்து தற்கொலை
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் தக்கோலத்தை அடுத்த முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் சிதம்பரம் (வயது 18). இவர், கடந்த சில நாட்களாக உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இதனால் விரக்தி அடைந்த சிதம்பரம் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு ஆஸ்பத்திரியிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியிலும் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிதம்பரம் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தக்கோலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com