வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

மாட்டார்சைக்கிள் வாங்கி தராததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

ஆரணி

ஆரணி பள்ளிக்கூட தெரு குடுப்பைக்காரர் பகுதியைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் ராஜேந்திரன் (வயது 22). இவர்கள் கிராமப் பகுதிகளில் ஜோதிடம் பார்த்து வந்தார்.

ராஜேந்திரன் தந்தையிடம் மோட்டார் சைக்கிள் வாங்கி தர வேண்டும் என்று நீண்ட நாட்களாக கேட்டு வந்துள்ளார். ஆனால் அவர் வாங்கி தரவில்லை.

இந்த நிலையில் ராஜேந்திரன் நேற்று இரவு வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார்.

சத்தம் கேட்டு உறவினர்கள் அவரை மீட்டு ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தன்.

இதுகுறித்து ஆரணி டவுன் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com