வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

காட்பாடியில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

காட்பாடி வஞ்சூர் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகன் ராகுல் (வயது 19). தொழிலாளி. சம்பவத்தன்று ராகுல் வீட்டிலிருந்தபோது அவரது தந்தை திட்டி உள்ளார். இதனால் மனமுடைந்த ராகுல் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றேர், ராகுலை மீட்டு சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ராகுல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com