புதுக்கடை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

புதுக்கடை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கடை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

புதுக்கடை, 

புதுக்கடை அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள பார்த்திபபுரம் பெரியவிளை பகுதியை சேர்ந்தவர் ரவிராஜ் (வயது 61). இவருடைய மகன் பிபின் ராஜ் (21). இவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த வேலை பிடிக்கவில்லை என்று வீட்டில் அடிக்கடி கூறி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் பெற்றோர் அவனை சமாதானப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இந்தநிலையில், சம்பவத்தன்று வேலை முடித்து வீட்டுக்கு வந்த பிபின் ராஜ் இரவு உணவை முடித்துவிட்டு மாடிக்கு தூங்கச் செல்வதாக கூறிவிட்டு சென்றவர், தனது அறையில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரவிராஜ் புதுக்கடை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com