மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

ஜோலார்பேட்டை அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
Published on

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த கட்டேரி கிராமம் பைரவன் வட்டத்தை சேர்ந்தவர் முனுசாமி என்பவரின் மகன் வல்லரசு (வயது 22). இவர் வேலூரில் பானிபூரி கடையில் வேலை செய்து வந்தார். மேலும் இவருக்கு அல்சர் ஏற்பட்டு கடந்த 2 மாதங்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்த நிலையில் வீட்டிலிருந்த வல்லரசு வலி தாங்க முடியாமல் கடும் அவதிபட்டார். இதனால் வீட்டை விட்டு வெளியே சென்று டி.வீரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு நிலத்தில் மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து வல்லரசுவின் சகோதரர் கோபி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் காதர்கான் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com