மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

பவித்ரா கோபித்துக்கொண்டு குழந்தையுடன் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
Published on

ஆனைமலை

ஆனைமலையை அடுத்த ஆலங்கடவு பகுதியை சேர்ந்தவர் முருகவேல்(வயது 28). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பவித்ரா(25). இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். முருகவேலுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதை பவித்ரா கண்டித்து வந்தார். இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு முருகவேல் மது குடித்து வந்ததால், கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதனால் பவித்ரா கோபித்துக்கொண்டு குழந்தையுடன் கோவையில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்துவிட்டார். இதன் காரணமாக மனமுடைந்து காணப்பட்ட முருகவேல், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com