மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை

சிவகிரியில் மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
மதுவில் விஷம் கலந்து குடித்து வாலிபர் தற்கொலை
Published on

சிவகிரி:

சிவகிரி மாலைக்கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஹரிச்சந்திரன் மகன் ஹரி கிருஷ்ணமூர்த்தி (வயது 35). இவர் பத்திர எழுத்தராக இருந்து வந்தார். இவருடைய மனைவி மருதவள்ளி (25). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை. ஹரி கிருஷ்ணமூர்த்திக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு தகராறு ஏற்பட்டதால், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு மருதவள்ளி கணவருடன் கோபித்துக்கொண்டு தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஹரி கிருஷ்ணமூர்த்தி வீட்டில் மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் வீடு பூட்டியே கிடந்ததாலும், வீட்டில் இருந்து துர்நாற்றம் வந்ததாலும் அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, ஹரி கிருஷ்ணமூர்த்தி இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com