பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

பூந்தமல்லி டிரங்க் சாலையில் அரசு தாலுகா ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி வளாகத்தில் பின்புறம் உள்ள செட்டில் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தூக்கில் பிணமாக தொங்கினார். இதனை கண்டு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த பூந்தமல்லி போலீசார், தூக்கில் தொங்கிய வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காக்கி நிற உடை அணிந்திருந்த அந்த வாலிபர் யார்?, எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு அவர் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாராவது அவரை கொன்றுவிட்டு உடலை ஆஸ்பத்திரி வளாகத்தில் தூக்கில் தொங்கவிட்டு சென்றனரா? என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com