சேலம் அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை

சேலம் அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் அருகே தந்தை திட்டியதால் வாலிபர் தற்கொலை
Published on

தச்சு தொழிலாளி

சேலம் இரும்பாலை காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை. இவருடைய மகன் விக்னேஷ்குமார் (வயது 20). தச்சு தொழிலாளி. திருமணம் ஆகாத இவர், கடந்த சில வாரங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், செலவுக்கு பணம் இல்லாததால் விக்னேஷ்குமார் ஒருவரிடம் வட்டிக்கு பணம் வாங்கி உள்ளார். இதுபற்றி அறிந்த தந்தை ஏழுமலை அவரை கண்டித்துள்ளார். இதனால் தந்தை, மகன் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறு நடந்தது.

தற்கொலை

இதில் மனம் உடைந்த விக்னேஷ்குமார் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த இரும்பாலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தந்தை திட்டியதால் தச்சு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com