வாகனம் மோதி வாலிபர் சாவு

நெல்லை அருகே வாகனம் மோதி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
வாகனம் மோதி வாலிபர் சாவு
Published on

நெல்லையை அடுத்த கங்கைகொண்டான் அருகே உள்ள மேட்டு பிராஞ்சேரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மூக்கன். இவருடைய மகன் கோதண்டராமன் (வயது 34).

இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு நெல்லை-மதுரை 4 வழிச்சாலையில் கங்கைகொண்டானில் ஒரு ஓட்டல் அருகே மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வாகனம் இவர் மீது மோதிவிட்டு வேகமாக சென்று விட்டது. இதில் தூக்கி வீசப்பட்ட கோதண்டராமன் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த கங்கைகொண்டான் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோதண்டராமன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com