

தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு பகுதியில் தந்தை கண்டித்ததால் களைக்கொல்லி மருந்து குடித்த வாலிபர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு கோவிந்தாபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த சின்னச்சாமி மகன் குமார் (வயது 51). இவரது மகன் ஜெகநாதன்(19). இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தந்தை குமார், மகனை வேலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்திப் பேசியுள்ளார்.
இதில் மனவேதனை அடைந்த ஜெகநாதன், கடந்த ஜூன் 25-ம் தேதி இரவு வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து வந்த ஜெகநாதன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து நாரைக்கிணறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.