ஏரியில் மூழ்கி வாலிபர் பலி

ஏரியில் மூழ்கி வாலிபர் பலியானார்.
ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
Published on

திருச்சி மாவட்டம் உப்பிலியபுரம் அன்பு நகரைச் சேர்ந்தவர் சரவணன். இவரது மகன் லோகேஸ்வரன் (வயது 19). கூலி தொழிலாளியான இவர் நேற்று மாலை தனது நண்பர்கள் யுகேஷ், சசிதரன், லேத்தீஸ்மணி ஆகியோருடன் ஜம்பேரியில் குளிக்க சென்றனர். அப்போது, எதிர்பாராதவிதமாக லோகேஸ்வரன் தண்ணீரில் மூழ்கினார். இதை கண்ட நண்பர்கள் அவரை மீட்டு உப்பிலியபுரம் அரசு மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையத்திற்கு கொண்டு வந்தனர். லோகேஸ்வரனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com