மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு

மின்சாரம் பாய்ந்து வாலிபர் இறந்தார்.
மின்சாரம் பாய்ந்து வாலிபர் சாவு
Published on

புள்ளம்பாடி மணக்காடு பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவரது மகன் ராஜேஷ் (வயது 34). பிளம்பர் வேலை செய்து வந்த இவர் நேற்று முன்தினம் புள்ளம்பாடி மெயின்ரோட்டில் சுந்தர் என்பவர் வீட்டில் மோட்டார் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக அவரது மீது மின்சாரம் பாய்ந்தது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்த புகாரின் பேரில் கல்லக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த ராஜேசுக்கு கேத்தரின்ஆண்டோரெக்ஸி (30)என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.  

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com