கடலூர் முதுநகரில் லாரி மோதி வாலிபர் சாவு

கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தா.
கடலூர் முதுநகரில் லாரி மோதி வாலிபர் சாவு
Published on

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அடுத்த சின்னபிள்ளையார் மேடு மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் இளவரசன் (வயது 27). வெல்டிங் தொழிலாளியான இவர் நேற்று கடலூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். கடலூர் முதுநகர் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது, பின்னால் வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இளவரசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், கடலூர் முதுநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com