கார்- வேன் மோதலில் வாலிபர் படுகாயம்

கார்- வேன் மோதலில் வாலிபர் படுகாயம் அடைந்தார்.
கார்- வேன் மோதலில் வாலிபர் படுகாயம்
Published on

ஆந்திர மாநிலம் புத்தூர் மாவட்டம் நகரி அடுத்த குன்ராஜ் குப்பத்தை சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன் (வயது 30). இவர் நேற்று முன்தினம் ஆந்திராவில் இருந்து மாம்பழங்களை சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு சென்னை கோயம்பேடு நோக்கி சென்றார். சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் திருத்தணி அடுத்த பட்டாபிராமபுரம் அருகே இரவு 9 மணியளவில் சென்றபோது சென்னையில் இருந்து திருத்தணி நோக்கி சென்ற கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த சவுக்கு தோப்பில் தலை குப்புற கவிழ்ந்தது.

தகவல் அறிந்து வந்த திருத்தணி போலீசார் காரில் அடிபட்டு கிடந்த திருத்தணி பாலாஜி நகரை சேர்ந்த அமர் (வயது 32) என்பவரை மீட்டு திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். காரில் பயணம் செய்த மற்றொரு நபரான காசிநாதபுரம் பகுதியை சேர்ந்த பச்சையப்பன் காயங்களின்றி உயிர் தப்பினர்.

இந்த விபத்து குறித்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com