

திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் யுவராஜ் (வயது 35). இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில் மணவாளர் நகர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் யுவராஜ் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு யுவராஜ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.