கார் மோதி வாலிபர் பலி

கார் மோதி வாலிபர் பலியானார்.
கார் மோதி வாலிபர் பலி
Published on

புதுக்கோட்டை அருகே குன்னவயல் பகுதியை சேர்ந்தவர் சிலம்பரசன் (வயது 21). இவர் நேற்று திருக்கோகாணம் அருகே தேசியநெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது சென்னையில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்ற கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சிலம்பரசன் படுகாயமடைந்தார். அவர் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருக்கோகர்ணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com